மதுரை: நகைக்காக பெண் கொலை: ஆயுள் தண்டனை உறுதி

0பார்த்தது
மதுரை: நகைக்காக பெண் கொலை: ஆயுள் தண்டனை உறுதி
திருச்சி திருவெறும்பூரில், நகைக்காக பக்கத்து வீட்டுப் பெண் முத்துலட்சுமியை கொலை செய்து முள்புதரில் வீசியதாக ரேவதி மீது வழக்கு பதியப்பட்டது. திருச்சி மகளிர் நீதிமன்றம் ரேவதிக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ரேவதி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், நகைக்காக கொலை நடந்திருப்பது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, ஆயுள் தண்டனையை உறுதி செய்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி