திமுக தென் மண்டல வாக்குச்சாவடி நிர்வாகிகள் மாநாடு மதுரை உத்தங்குடியில் இன்று (பிப்ரவரி 21) நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்காக, அவர்களது இருக்கைகளிலேயே சிற்றுண்டி, குடிநீர் பாட்டில்கள் அடங்கிய பைகள் முன்கூட்டியே வைக்கப்பட்டுள்ளன. மேலும், மதிய உணவாக அனைவருக்கும் ஹாட்பாக்ஸில் அடைக்கப்பட்ட சுடச்சுட மட்டன் பிரியாணி வழங்கப்பட உள்ளது.