ஆயுள் தண்டனைக் கைதியான கணவருடன் கருவுறுதல் சிகிச்சைக்காக 21 நாட்கள் பரோல் விடுப்பு கோரி மனைவி ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், "3 கொலை போன்ற கொடூரமான குற்றங்களைச் செய்த, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியின் குழந்தை என்ற களங்கத்துடன் ஒரு குழந்தை இந்த உலகில் வளர வேண்டுமா? அந்த களங்கத்துடன் ஒரு குழந்தை வளர்வதை நீதிமன்றம் அனுமதிக்காது. எதார்த்தங்களை நீதிமன்றம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.