முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். எந்த உழைப்பும் இன்றி அதிகாரத்திற்கு வந்ததாகக் குறிப்பிட்ட அவர், பேரிடர் காலங்களில் விஜய்யின் பங்களிப்பு என்ன என்று கேள்வி எழுப்பினார். முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு போன்ற சட்டப் போராட்டங்களில் அவர் ஈடுபடவில்லை. சினிமாவில் நடித்து குடும்பத்தை வளர்த்துக் கொண்டதாகவும் குற்றம் சாட்டினார். மேகதாது, பயிர் கடன், பெண்கள் பாதுகாப்பு, மின்வெட்டு, போதைப்பொருள் நடமாட்டம் போன்ற பிரச்சனைகள் குறித்து
விஜய் என்ன திட்டம் வைத்துள்ளார் என்று அவர் கேள்வி எழுப்பினார். அதிமுகவை அழிக்க நினைத்தால் தொண்டர்கள் சிங்கமென எழுந்து உங்களை துவம்சம் செய்வார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.