மதுரை: வைகையாற்றில் இறங்க புறப்படுகிறார் கள்ளழகர்

57பார்த்தது
மதுரை: வைகையாற்றில் இறங்க புறப்படுகிறார் கள்ளழகர்
மதுரை சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான வைகையாற்றில் கள்ளழகர் இறங்குவதற்காக இன்று (மே 10) மாலை 6:00 மணிக்கு அழகர்கோவிலிலிருந்து மதுரை நோக்கி புறப்படுகிறார். இன்று மாலை சுவாமிக்கு நூபுர கங்கை தீர்த்தத்தில் அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் கண்டாங்கி பட்டுடுத்தி கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். கோயிலைக் காக்கும் 18ம் படி கருப்பண சுவாமியிடம் 'சென்று வருகிறேன்' என்றுக்கூறி விட்டு தங்கப்பல்லக்கில் வேல் கம்புடன் புறப்படுகிறார். 

இந்நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் "கோவிந்தா கோவிந்தா" என்று முழக்கமிட்டு கள்ளழகரை கோவிலிருந்தே பின்தொடர்ந்து அழைத்து வர ஏராளமான பக்தர்கள் இன்று மதியம் முதலே மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து அழகர் கோவில் நோக்கி வந்துவிடுவார்கள். இவர்கள் அழகருடன் சேர்ந்து மதுரையை நோக்கி வருவார்கள். நாளை (மே 11) காலை 5 மணிக்கு மூன்றுமாவடியில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி