மதுரை மேலூர் அருகே அழகர் கோவில் மலைகளுக்கிடையே உள்ள 'பெரிய அருவி நீர்த்தேக்கம்' தற்போது பெய்துள்ள தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்து வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த நீர்த்தேக்கத்தை மதுரை வாசிகள் ஒரு நாள் ட்ரிப்பாக சென்று கண்டு களிக்கலாம். காமராஜர் தமிழக முதலமைச்சராக இருந்தபோது அழகர்கோவில் மலையின் 2 கணவாய்களுக்கு இடையே இந்த நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. இது மேலவளவில் இருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.