மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவில் அங்கக வேளாண்மை குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் இன்று (நவ. 9) விழிப்புணர்வு பயணமாக வருகை தந்தனர். மேலவளவு உயிரியல் காரணிகள் உற்பத்தி மைய ஆய்வகத்திற்கு சென்று உயிர் உரங்கள், இயற்கை இடு பொருட்கள் உற்பத்தி குறித்து கேட்டறிந்தனர். மேலும் தென்மதுரையின் பாரம்பரிய நெல் ரகங்களான செந்நெல் என்ற தில்லைநாயகம், அரை சம்பா, குரங்கு சம்பா, கருப்புகவுணி, தூயமல்லி நெல் பயிர்களை பார்வையிட்டனர்.