மேலூர்: திருவாதவூர் சாலையில் மாட்டு வண்டி பந்தயம்

52பார்த்தது
மேலூர்: திருவாதவூர் சாலையில் மாட்டு வண்டி பந்தயம்
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பதினெட்டாங்குடி கிராமம், சாரதி தமிழ்மணி நினைவாக ஜாலி பாய்ஸ் நடத்திய 3-ம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் பதினெட்டாங்குடி திருவாதவூர் சாலையில் நடைபெற்றது. பெரிய மாடு போட்டியில் 10 வண்டிகள் கலந்து கொண்டன.

முதல் பரிசு 20001 பதினெட்டாங்குடி ஹன்சிகா மோனிஷ் அயிலாங்குடி மலைச்சாமி, இரண்டாம் பரிசு 18001 பரவை சோனமுத்து சேர்வை, பதினெட்டாங்குடி ஆனந்த், மூன்றாம் பரிசு 16001 பாகனேரி ஆனந்த் பார்த்தீபன், நான்காம் பரிசு 5001 பண்ணைபுரம் சோசன்னா, சசி பிரேம் ஆகியோர் வெற்றி பெற்றனர். சிறிய மாட்டு போட்டியில் 20 ஜோடிகள் கலந்து கொண்டன. 

போட்டி இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. முதல் சுற்றில் முதல் பரிசு பாகனேரி புகழேந்தி, இரண்டாம் பரிசு நரசிங்கம்பட்டி ராமசாமி, மூன்றாம் பரிசு பரவை சோனை முத்து, நான்காம் பரிசு தேவாரம் செல்வம்ராஜன், இரண்டாம் சுற்றில் முதல் பரிசு ஒத்தப்பட்டி பரமசிவம், இரண்டாம் பரிசு எட்டிமங்கலம் பங்கஜம் கணேசன், மூன்றாம் பரிசு கள்ளந்திரி ஐந்து கோவில் சாமி, நான்காம் பரிசு பதினெட்டாங்குடி நிகிலேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். 

மாட்டுவண்டி பந்தயத்தை கொட்டகுடி, திருவாதவூர், பனங்காடி, வேப்படப்பு, பூஞ்சுத்தி, ஆமூர், தெற்கு தெரு, மேலூர் ஆகிய பகுதியிலிருந்து வந்திருந்த மாட்டு வண்டி பந்தய ரசிகர்கள் ரோட்டில் இருபுறம் நின்று ஆரவாரம் செய்து கண்டுகளித்தனர்.

தொடர்புடைய செய்தி