மேலூர்: கட்டிட தொழிலாளி கல்லால் அடித்து கொலை. பரபரப்பு

2467பார்த்தது
மேலூர்: கட்டிட தொழிலாளி கல்லால் அடித்து கொலை. பரபரப்பு
மதுரை மேலூர் செக்கடி பகுதியில் டைல்ஸ் பதிக்கும் கட்டிட தொழிலாளியான மணிமாறன் (27) இன்று (நவ. 10) அதிகாலை வேலைக்கு செல்லும்போது உணவகம் முன்பாக தலையில் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தகவலறிந்த டிஎஸ்பி சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி