மேலூர்: போதையில் பெட்ரோலை ஊற்றியவர் தீ பிடித்து பலி

68பார்த்தது
மேலூர்: போதையில் பெட்ரோலை ஊற்றியவர் தீ பிடித்து பலி
மதுரை மாவட்டம் மேலூர் மேலவளவு அருகே கொங்கம்பட்டியை சேர்ந்த சின்னையாவின் மகன் சொக்கலிங்கம் (27) என்பவர் மது போதைக்கு அடிமையானவர். இவர் சகோதரரின் மனைவியுடன் தகராறு செய்ததை தாயார் கருப்பாயி கண்டித்துள்ளார். 

அப்போது மது போதையில் இருந்த சொக்கலிங்கம் தாயை மிரட்டுவதற்காக தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, எதிர்பாராத விதமாக அவர் உடலில் தீப்பற்றியது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று முன்தினம் (மார்ச். 22) இரவு பலியானார். இதுகுறித்து மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி