மேலூர்: மாரடைப்பால் அரசு ஊழியர் மரணம்.

3பார்த்தது
மேலூர்: மாரடைப்பால் அரசு ஊழியர் மரணம்.
மதுரை ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கதிர்வேல் முனியாண்டி (46), மேலூரில் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். நேற்று (நவ. 4) அலுவலகத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது சந்தைப்பேட்டை அருகே மயக்கமடைந்து கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மாரடைப்பால் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி