மேலூர்: பலசரக்கு கடைகளில் அபராதம் விதித்த சுகாதார ஆய்வாளர்

63பார்த்தது
மேலூர்: பலசரக்கு கடைகளில் அபராதம் விதித்த சுகாதார ஆய்வாளர்
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் கடைகளில் விற்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மேலூர் நகராட்சி ஆணையாளர் பாரத் அவர்களின் உத்தரவின் பேரில் மேலூர் நகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை மேலூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் தினேஷ் குமார் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் உணவகங்கள், வணிக நிறுவனங்கள், பலசரக்கு கடைகளில் நேற்று (மார்ச். 19) ஆய்வு செய்து 200 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூபாய் 18,000 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து மேலூர் பகுதிகளில் இதுபோன்ற சோதனைகள் தொடரும் என்று நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி