மேலூர்: சட்ட விழிப்புணர்வு கூட்டத்தில் நீதிபதி பேச்சு

85பார்த்தது
மேலூர்: சட்ட விழிப்புணர்வு கூட்டத்தில் நீதிபதி பேச்சு
மதுரை மாவட்டம் மேலூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் பொட்டப்பட்டி சமுதாய திருமண மண்டபத்தில் நேற்று (மார்ச். 28) நடைபெற்றது. 

மேலூர் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், மேலூர் சார்பு நீதிமன்ற நீதிபதியுமான எம்.சாமுண்டீஸ்வரி பிரபா பொதுமக்களுக்கு சட்டப் பணிகள் விழிப்புணர்வு குறித்து பேசினார். ஒருத்தரை கைது செய்றாங்க அப்படின்னா என்ன காரணத்துக்காக கைது செய்றாங்க, முதலில் அந்த காவல் நிலையத்திலிருந்து வருறவங்க உங்க கிட்ட சொல்லணும் தெளிவா எடுத்துரைக்கனும். 

உங்களை வந்து கைது செய்றதுக்கான ஒரு சூழ்நிலையில் பெண்களாக இருந்தால் பெண்கள் மூலமாக தான் உங்களை கைது செய்ய முடியும். இதெல்லாம் அடிப்படையாக தெரிஞ்சு வச்சிருக்க வேண்டிய விஷயம். உங்களை நீதிமன்றத்துக்கு வந்து கொண்டு போறதுக்கு வந்து 24 மணி நேரம்தான் நீதிபதி முன்னாடி ஆஜர்படுத்தி உங்களுடைய தரப்பை உங்க பக்கம் தப்பு இருக்கா? தப்பு இல்லையாங்குறத நீங்க நீதிபதி முன்னாடி சொல்லலாம். 

அவங்க பிடிச்சிட்டு போனாங்கன்றதுக்காக நம்ம பேசாம இருக்கணும்னு அவசியம் இல்ல. உங்க தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கலாம். கட்டாயம் வழக்கறிஞரை ஏற்பாடு செய்து கொண்டு செல்ல வேண்டும் என்பது சட்டத்தில் இருக்கு. நிறைய பேர்கள் எல்லாம் செல் போனை கையில் வைத்து கிட்டு இருக்காங்க. 18 வயது பூர்த்தி அடையாத குழந்தைகள் என்ன செய்யறதுன்னு தெரியாம தவறு செஞ்சுடுறாங்க என்றார்.