மேலூர்: 33 ஆண்டுகளுக்கு பிறகு களரி திருவிழா.

2பார்த்தது
மேலூர்: 33 ஆண்டுகளுக்கு பிறகு களரி திருவிழா.
மதுரை மேலூர் அருகே கூத்தப்பன்பட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ நரியங்குடி கருப்பசாமி, ஸ்ரீ பட்ட சுவாமிகள், ஸ்ரீ ஒன்பது தெய்வங்களுக்கும் 33 வருடங்களுக்குப் பிறகு மகா களரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நரியங்குடி கருப்புசாமி கோவிலில் இருந்து சாமியாடிகள், பங்காளிகள், பொதுமக்கள் ஊர்வலமாக ஆட்டுக்குளம் அரியான் கண்மாய்க்குச் சென்று தீர்த்தமாடினர். பின்னர், வானவேடிக்கை முழங்க, தப்பு தாளத்துடன் களரி சாமி ஆட்டமாடி கூத்தப்பன்பட்டி நரியங்குடி கருப்புசாமி கோவிலுக்கு வந்தடைந்தனர்.

தொடர்புடைய செய்தி