மதுரை மாவட்டம் மேலூர் கருத்தப்புலியன்பட்டி கிராமத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் புதிதாக கட்டப்படவுள்ள "முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம்" பணிகளை இன்று (ஜூன் 9) வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, நகராட்சி சேர்மன், திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.