மதுரை மேலூர் அருகே மேலவளவு ஊராட்சிக்கு உட்பட்ட 9 கிராம விவசாயிகளுக்கு நகை, பயிர் கடன், உரம் குறைந்த விலையில் வழங்கும் தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் கடந்த 6 மாதங்களாக பூட்டிக் கிடப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் பலன் இல்லை என்றும், சங்கத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.