மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்களின் அறிவுறுத்தலின்படி நெகிழி சேகரிப்பு இயக்கம் நடத்த அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் மேலூர் நகராட்சி பகுதியில் உள்ள அழகர்கோவில் ரோடு பெரியாறு பாசன கால்வாய் பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டு இன்று (மார்ச் 23) நகராட்சி ஆணையர் பாரத் பணிகளை துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து முழுமையாக பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது. இந்நிகழ்வினை மேலூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் தினேஷ்குமார் ஒருங்கிணைத்தார். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டு சுமார் ஒன்றரை டன் அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டு பெரியாறு பாசன கால்வாய் தூய்மை செய்யப்பட்டது.