மேலூர்: வெள்ளலூர் நாட்டில் கோவில் கும்பாபிஷேகம்

82பார்த்தது
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் கோவில் கும்பாபிஷேகம்
மதுரை மாவட்டம், மேலூர் வெள்ளலூர் நாட்டைச் சேர்ந்த மன்றமலைப்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர், அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணர் சுவாமி திருக்கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா நேற்று (மே 9) நடைபெற்றது. பக்தர்கள் அழகர் கோவிலில் ராக்காயி அம்மன் கோவிலில் தீர்த்தமாடி காப்பு கட்டி 15 நாட்களாக கடுமையான விரதம் இருந்து வந்தனர்.

 நேற்று மங்கள இசையுடன் நான்காம் யாகசாலா பூஜை, கோ பூஜை, தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் இருந்து புனித நீரினை எடுத்து காப்பு கட்டிய பக்தர்கள் கோவிலை சுற்றி வந்தனர். அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அப்போது வானத்தில் கருட பகவான் வட்டமிட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

தொடர்ந்து புனித நீரினை கும்பத்தில் ஊற்றி மஹா கும்பாபிஷேக வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ சுந்தர விநாயகர், ஸ்ரீ கிருஷ்ணர் சுவாமிக்கு விசேஷ தீபாராதனை பட்டு சாத்துதல் அர்ச்சனைகள் நடைபெற்றன. கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அறுசுவை அன்னதானத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானத்தில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி