மதுரை அருகே மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் உள்ள திருமறைநாதர் வேதநாயகி அம்மாள் கோவிலில் வைகாசி திருக்கல்யாண கொடியேற்றம் கடந்த 31 ஆம் தேதி காலையில் நடைபெற்றது.
இத்திருவிழாவில் கடந்த ஜூன் 4 ஆம் தேதி மாங்கொட்டை திருவிழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (ஜூன் 7) காலை 10:35 மணிக்கும் 11:05 மணிக்கும் இடைப்பட்ட சிம்ம லக்னத்தில் திருமறைநாதர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்வுக்கு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நாளை (ஜூன் 8) காலை திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.