மதுரை வடக்கு புறநகர் மாவட்டம், மேலூர் சட்டமன்ற தொகுதி, தமிழக வெற்றிக் கழகம் மேலூர் நகர் சார்பில் ஈகை பெருவிழாவை முன்னிட்டு ரமலான் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று 23ந் தேதி ரஹ்மா திருமண மஹாலில் நடைபெற்றது.
தமிழக வெற்றிக் கழக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் விஜய் அன்பன் கல்லானை தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட செயலாளர் விஷால் கிருஷ்ணா முன்னிலை வகித்தார். மேலூர் நகர் செயலாளர் பிரசாத் ஏற்பாட்டில் இஸ்லாமிய சமுதாய பெருமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அரிசி, பருப்பு, பிரியாணிக்குரிய மளிகை சாமான்கள், சேலை, வேஷ்டி, டிரஸ் வழங்கப்பட்டது.
விழாவில் மாவட்ட பொருளாளர் மணிமாறன், மாவட்ட துணைச் செயலாளர் தினகரன், மேலூர் ஒன்றிய செயலாளர் மனோஜ், மேலூர் ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் வாசுதேவன், சுரேஷ், தொண்டரணி நிர்வாகிகள் பால் பாண்டி, கோபாலகிருஷ்ணன், மேலூர் நகர் நிர்வாகிகள் மற்றும் தமிழக வெற்றிக் கழக அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.