மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெரு ஊராட்சியில் அழகர்கோவில் மற்றும் நரசிங்கம்பட்டி மலைகளில் இருந்து வரும் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து வனத்துறைக்கு பலமுறை தகவல் அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் இன்று கிராமம் முழுவதும், குரங்குகள் வாழவா? தெற்கு தெரு மக்கள் ஊரை விட்டு ஓடவா? என மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.