மதுரை: நகர் பேருந்தை முற்றுகையிட்ட மாணவர்கள்

831பார்த்தது
மதுரை: நகர் பேருந்தை முற்றுகையிட்ட மாணவர்கள்
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே தொந்தலிங்கபுரம் கிராமத்திற்கு கடந்த இரண்டு வாரங்களாக மாலை நேரத்தில் மேலூர் நகர பேருந்து இயக்கப்படாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து மேலூர் போக்குவரத்துத் துறையில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், நேற்று (பிப். 19) காலை பள்ளி மாணவர்கள் பேருந்தை சிறைபிடித்தனர். அதிகாரிகள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி