மதுரை மாவட்டம் மேலூரில் பாரதிதாசன் அகாடமி மற்றும் இளைஞர்களின் வெற்றி பயணம் சார்பில் சுதந்திர தின விழாவையொட்டி மதுரை மாவட்ட அளவிலான மாபெரும் பேச்சுப்போட்டி நேற்று (ஆக. 17) நடைபெற்றது. இதில் பிரிவு-1ல் த. யாழினி முதல் பரிசையும், க. சத்யவன் இரண்டாம் பரிசையும், சுபிஷாஸ்ரீ மூன்றாம் பரிசையும் வென்றனர். பிரிவு-2ல் பெ. துர்கா முதல் பரிசையும், சரவண பவதாரணி இரண்டாம் பரிசையும், ரா. பெரியசவுளி மூன்றாம் பரிசையும் தட்டிச் சென்றனர்.