நேற்று (பிப். 22) மேலூரில், மேலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் யோகராஜ் பாண்டியன் தலைமையில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரச்சார தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் விஷால் கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் மணிமாறன், மத்திய ஒன்றிய செயலாளர் மனோஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் கௌதம், நகர் இணை செயலாளர் சுபாஷினி மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.