மதுரை மாவட்டம் ஒத்தக்கடை மற்றும் கொட்டாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த முருகன் (40) மற்றும் அடைக்கண் (26) ஆகியோரை ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 32 கிலோ 25 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தொடர் விசாரணை நடந்து வருகிறது.