மதுரையில் பைக் லாக்கை உடைத்து இருசக்கர வாகனம் திருட்டு

1103பார்த்தது
மதுரையைச் சேர்ந்த ஜெயசூர்யா என்பவர், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றபோது, இரவு சுமார் 10:30 மணியளவில் வாகனம் திருடப்பட்டது. அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், இரு இளைஞர்கள் வாகனத்தின் லாக்கை காலால் உடைத்து திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து ஜெயசூர்யா கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி