மதுரை மாவட்டம் மேலூர் அரசு கலைக் கல்லூரி அருகே நேற்று முன்தினம் இரவு (மே. 14) தனியார் நிதி நிறுவன ஊழியர் தமிழ்ச்செல்வன் (30) இருசக்கர வாகனத்தில் சென்றபோது, இருவர் அவரை வழிமறித்து அவரிடமிருந்த 2 அலைபேசிகள், இருசக்கர வாகனம் மற்றும் ரூ. 4 ஆயிரத்தை பறித்துச் சென்றனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், மதுரை நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (26) மற்றும் சந்தோஷ் குமார் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.