உசிலம்பட்டி: பீரோவில் இருந்த 14.5 பவுன் நகைகள் திருட்டு

1பார்த்தது
உசிலம்பட்டி: பீரோவில் இருந்த 14.5 பவுன் நகைகள் திருட்டு
உசிலம்பட்டி அருகே, உத்தப்பநாயக்கனுார் மேலவெள்ளை மலைப்பட்டியில் பரமன்-லட்சுமி தம்பதியினர் வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை வெளியே வைத்திருந்தபோது, மர்மநபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் இருந்த 14.5 பவுன் நகைகளைத் திருடிச் சென்றார். பின்னர், வீட்டை மீண்டும் பூட்டிவிட்டுச் சென்றார். போலீஸ் விசாரணையில், திருடப்பட்ட நகைகள் வீட்டின் பின்புறம் பொட்டலமாக கிடந்தது கண்டறியப்பட்டது. பரமன் குடும்பத்திற்கு தெரிந்த நபரே பயத்தில் நகைகளை போட்டுச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.