மதுரை மாவட்டம் பேரையூர் கேகேஜி நகரில் ராதா (54) என்பவர் வீட்டில் இருந்த 5 பவுன் தங்க நகைகள் திருடு போனது. மே 24 அன்று வீட்டைப் பூட்டிவிட்டு மகன் வீட்டிற்கு சென்ற ராதா, மறுநாள் திரும்பி வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்தன. பீரோவும் உடைக்கப்பட்டு நகை திருடு போனது தெரியவந்தது. பேரையூர் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.