மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே சித்தூரைச் சேர்ந்த சுரேஷ்குமாரின் 2 வயது மகன் ஆருத்ரன், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது தாகம் எடுத்து தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணெயைக் குடித்தான். இதனால் மயங்கி விழுந்த சிறுவனை விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவன் உயிரிழந்தான். இது குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.