மதுரையில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம்

783பார்த்தது
மதுரையில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம்
சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு மதுரையை தாண்டிச் செல்லும்போது, பொதுப்பெட்டியில் இருந்த ஒரு பயணி ரயில் இன்ஜினில் இருந்து புகை வருவதாக நினைத்து அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினார். இதனால் ரயில் திடீரென திருமங்கலம் ரயில் நிலையத்தில் நின்றது. லோகோ பைலட் மற்றும் அதிகாரிகள் விசாரித்ததில், இன்ஜினில் தீப்பிடித்ததாக நினைத்து, பயணி தவறுதலாக அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியதும் தெரியவந்தது. சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.