மதுரை: அங்கன்வாடியில் குழந்தைகளை சேர்க்க ஆட்சியர் அறிவுரை

67பார்த்தது
மதுரை: அங்கன்வாடியில் குழந்தைகளை சேர்க்க ஆட்சியர் அறிவுரை
மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம், ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியினை மேம்படுத்தும் விதமாக மாவட்டத்தில் செயல்படும் 2,001 குழந்தைகள் மையங்களில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவக் கல்வி போன்றவை வழங்கப்படுகிறது. 

2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இம்மையத்தில் முறைசாரா முன்பருவக் கல்வி, செய்கைப் பாடல், கதை, விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அதன்அடிப்படையில் தற்போது அங்கன்வாடி பணியாளர்கள் வீடுகள் தோறும் இம்மையங்களில் குழந்தைகள் சேர்க்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, பெற்றோர்கள் தங்களது 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் சேர்த்திட வேண்டும் என்ற தகவலை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்கள் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you