தமிழ்நாடு காவல் துறையின் தென் மண்டல 'ஆபரேஷன் ஷீல்டுநெட்' நேற்று (மே 21) தொடங்கப்பட்டது. முதல் நாளிலேயே மதுரை மாவட்டத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 04 பேர் மற்றும் பிடியாணைகள் நிலுவையில் உள்ள 09 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், 520 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஒரு நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.