மதுரை: திமுக அரசின் நிதி முறைகேடு; பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்

2பார்த்தது
மத்திய அரசு பட்டியல் சமுதாய மக்களுக்கு வழங்கும் நிதியை திமுக அரசு தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி, மதுரை திருவள்ளுவர் சிலை அருகே பாஜக பட்டியல் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பட்டியல் அணி தலைவர் அலெக்ஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர்கள் முத்துமாரி, திருப்பதி ஆகியோர் முன்னில வகித்தனர். பாஜக மாநில துணைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் இராமசீனிவாசன், மதுரை மாவட்டத் தலைவர்கள் மாரி சக்கரவர்த்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பெண்கள் கலந்துகொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.