மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னன், முக அழகிரியின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டவர். கடந்த 10 ஆண்டுகளாக அரசியலில் இருந்து விலகியிருந்த மன்னன், மீண்டும் திமுகவில் இணைய பலமுறை முயற்சி செய்ததாகவும், முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து கடிதம் அளித்தும் பதில் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (பிப்ரவரி 17) மன்னன் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.