மதுரை: விஜயை கடுமையாக விமர்சித்த நெல்லை முபாரக்

0பார்த்தது
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், நடிகர் விஜய் தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை கூட சரி செய்யவில்லை என்றும், மத்திய அரசின் நெருக்கடிகள் குறித்தும் பேசவில்லை என்றும் குற்றம் சாட்டினார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இஸ்லாமிய மக்கள் பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளனர் என்றும், 2026 தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், விஜய்க்கு சென்சார் போர்டு மூலம் நெருக்கடி கொடுக்கப்பட்டால் அவர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும், அவர் நிலைப்பாட்டை வெளிப்படுத்தாததால் நம்பத்தகுந்தவராக இல்லை என்றும் கூறினார். அதிமுகவின் கூடா நட்பு கேடாய் முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி