மதுரை: பழனிவேல் தியாகராஜன் அரசியலில் இருந்து ஓய்வு?

1001பார்த்தது
மதுரை: பழனிவேல் தியாகராஜன் அரசியலில் இருந்து ஓய்வு?
முன்னாள் திமுக அமைச்சரும், மதுரை மத்தி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், பொதுவாழ்வில் இருந்து சில காலம் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அவர் இத்தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சமீபத்தில் 60 வயது எட்டிய நிலையில் தொடர்ந்து மக்கள் பணியாற்றியதால் சில காலம் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி