மதுரை: கல்குவாரிக்கு எதிர்ப்பு.. கலெக்டர் காரை மறித்த மக்கள்

0பார்த்தது
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் கல்லணை உள்ளிட்ட 4 கிராமங்களில் செயல்படும் கல்குவாரிகளுக்கு அனுமதி ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அப்போது கிராம மக்கள், ஆட்சியர் காரை முற்றுகையிட்டனர்.  உடனே கிராம மக்களை காவல்துறையினர் கைது செய்ய முயன்றனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால் கிராம மக்கள் விடுவிக்கப்பட்டனர். கல்குவாரிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பல ஆண்டுகளாக சட்டவிரோத குவாரிகள் செயல்படுவதாகவும், பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட இடங்களை ஆக்கிரமித்துள்ளதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.