மதுரை: ஸ்டெர்லைட் வந்தால் போராட்டம் -வைகோ

1176பார்த்தது
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அரசின் PMSHRI திட்டத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும். மும்மொழி கொள்கையை அனுமதிக்கக் கூடாது. ஸ்டெர்லைட் மீண்டும் வந்தால் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். கூட்டணி ஆட்சி குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்தாலும், மாநில சுயாட்சியை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார். அனுபவம் இல்லாதவர்கள் அரசுக்கு நற்பெயரை கெடுக்கும் வகையில் செயல்படுவதை முதலமைச்சர் தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி