மதுரை: குறுக்கே வந்த நாய் மீது டூவீலர் மோதியதில் ஆசிரியர் பலி

0பார்த்தது
மதுரை: குறுக்கே வந்த நாய் மீது டூவீலர் மோதியதில் ஆசிரியர் பலி
சிவகங்கை மாவட்டம் ஏனாதியைச் சேர்ந்த ஆசிரியர் ராமமூர்த்தி (42) மதுரை மேல அனுப்பானடி அரசுப் பள்ளியில் பணியாற்றி வந்தார். சக ஆசிரியரின் தாயார் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பும்போது, தும்மக்குண்டு கரிசல்பட்டி விலக்கு அருகே நாயின் மீது மோதி இருவரும் காயமடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமமூர்த்தி நேற்று (நவ. 6) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிந்துபட்டி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி