தல்லாகுளம்: வாளுடன் பதுங்கிய வாலிபர் கைது

1271பார்த்தது
தல்லாகுளம்: வாளுடன் பதுங்கிய வாலிபர் கைது
மதுரை தல்லாகுளம் போலீஸ் எஸ்ஐ அப்துல் காதர் தலைமையில் போலீசார் தபால்தந்தி நகர் கண்மாய் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, போலீசாரை கண்டதும் தப்பியோடிய வாலிபரை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தனர். அவரிடம் இருந்து வாள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், அவர் உச்சப்பரம்பு மேடு அம்பேத்கர் காலனியை சேர்ந்த சஞ்சய் சந்தோஷ்(20) என்பதும், வழிப்பறி செய்ய வாளுடன் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி