திருமங்கலம்: பேருந்து மோதி டீக்கடைகாரர் பலி

944பார்த்தது
திருமங்கலம்: பேருந்து மோதி டீக்கடைகாரர் பலி
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆலம்பட்டியைச் சேர்ந்த டீக்கடை உரிமையாளர் போதுமணி (50) என்பவர், பிப்ரவரி 6 அன்று மாலை கடைக்கு பொருட்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் சென்றபோது, விருதுநகர் ரோட்டில் ஆறுகண் பாலம் அருகே அரசு பேருந்து மோதி பலத்த காயமடைந்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (பிப்ரவரி 7) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருமங்கலம் போலீசார் பேருந்து ஓட்டுநர் கருப்பசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி