மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆண்டவர் கோயில் தெருவைச் சேர்ந்த பலசரக்கு கடை ஊழியர் குருநாதனின் (53) மனைவி சரஸ்வதி (45) என்பவர் நேற்று (ஜூன் 2) காலை குருநாதன் வேலைக்குச் சென்ற நிலையில் சரஸ்வதியும் அவரது மகனும் மதுரையில் உறவினர் இல்லத் திருமணத்திற்குச் சென்று விட்டனர்.
இந்நிலையில் மதியம் வீட்டிற்கு வந்த குருநாதன் சாப்பிட்டு விட்டு கதவைப் பூட்டி, சாவியை கதவுக்கு அருகில் வழக்கமாக வைக்கும் இடத்தில் வைத்துச் சென்றுள்ளார். இதைக் கவனித்த மர்ம நபர்கள் கதவைத் திறந்து பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளைத் திருடிச் சென்றனர். இதுகுறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. திருமங்கலம் நகர் போலீசார் நகைகளைத் திருடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.