மதுரை திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி அருகே போத்தநதி கிராமத்தில் நேற்று (ஜூலை 4) இரவு தெற்கு மாவட்ட திமுக சார்பாக மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தலைமையில் திமுக அரசின் சாதனைகளை விளக்கிக் கூறி ரூ.3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளாக 290 குடும்பத்தினர்களுக்கும், நான்கு கிரிக்கெட் அணிகளுக்கும் உபகரணங்கள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டன. பின்னர் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள், கள்ளிக்குடி பகுதி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.