மதுரை: டாக்டர் தூக்கிட்டு தற்கொலை; பரபரப்பு

76பார்த்தது
மதுரை: டாக்டர் தூக்கிட்டு தற்கொலை; பரபரப்பு
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள சிவரக்கோட்டையில் வசிக்கும் பரிமளாவின் மகன் ஆதி விக்னேஸ்வரன் (25) என்பவர் எம்பிபிஎஸ் படித்து வீட்டிலிருந்து மேல் படிப்புக்குப் படித்து வருகிறார். இவரது தாயார் பரிமளா அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். பரிமளாவின் கணவர் 4 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஜன. 10) மதியம் பரிமளா வேலைக்குச் சென்றிருந்த நிலையில் வீட்டிலிருந்த ஆதி விக்னேஸ்வரன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பரிமளா கள்ளிகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி