திருமங்கலம்: மகளை கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

66பார்த்தது
திருமங்கலம்: மகளை கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
மதுரை மாவட்டம் திருமங்கலம் டி. கல்லுப்பட்டி அருகே வி. ராமநாதபுரத்தை சேர்ந்த முருகன்(53) என்பவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் வேலைக்கு ஒழுங்காக செல்லாமல் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். 

இதை அவர்களது 5 வயது மகள் தனது பாட்டி மற்றும் அருகில் உள்ளவர்களிடம் கூறினார். இந்நிலையில் கடந்த 2018 ல் இரவு தகராறு ஏற்பட்ட போது முருகன் போதையில் மனைவியை தாக்கியுள்ளார். இதை பார்த்த மகள் யாரிடமாவது சொல்லிவிடுவார் என்ற பயத்தில் சிறுமியின் தலையில் கோடாரியால் தாக்கினார். 

இதனால் சிறுமி உயிரிழந்தார். இதுகுறித்து வில்லுார் போலீசார் கொலை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். மதுரை 5வது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இதில் முருகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5000 அபராதமும் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் உத்தரவிட்டார்.