திருமங்கலம்: மருத்துவ முகாமை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர்

81பார்த்தது
திருமங்கலம்: மருத்துவ முகாமை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர்
தமிழ்நாடு அரசு வருமுன் காப்போம் திட்டம் ஆரம்ப
சுகாதார நிலையம் செக்கானூரணி, கப்பலூர் தொழில் அதிபர்கள் சங்கம் இணைந்து நடத்திய சிறப்பு மருத்துவ முகாம் கப்பலூர் தொழிலதிபர்கள் சங்க கட்டிடத்தில் நேற்று (டிச. 24) நடைபெற்றது. முகாமில், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான உதயக்குமார் கலந்து கொண்டு முகாமினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, காசநோய், இதய நோய் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்குமான பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் கப்பலூர் தொழிலதிபர்கள் சங்க தலைவர் ரகுநாத ராஜா, டாக்டர் உமா மகேஸ்வரி வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவர்கள் ராஜரத்தினம், உமா, மாவட்ட நலக் கல்வியாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் தலைமையில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாம் ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பழனி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செய்தனர்.

தொடர்புடைய செய்தி