மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூரை சேர்ந்த கண்ணன் (34) என்பவர் இட்லி கடை நடத்தி வந்தார். இவர் நேற்று (மார்ச். 15) மதியம் கப்பலுார் ரிங் ரோட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அருகே சாலையை கடக்க முயன்ற போது திருமங்கலத்தில் இருந்து மதுரையை நோக்கி அதிவேகமாக சென்ற ஜீப் மோதியதில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.