திருமங்கலம்: பெண்களுக்கான இப்தார் நிகழ்ச்சி

மதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலம் நகர் முகமதுசாபுரம் கிளை தமுமுகவின் மகளிர் பிரிவான தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை சார்பாக இன்று (மார்ச். 23) பெண்களுக்கான இஃப்தார் நிகழ்ச்சி நகரத் தலைவர் அஜ்மீர் அலி தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் தமிழ்நாடு மகளிர் பேரவை மாநில துணை செயலாளர் நஜிமா பேகம் அவர்கள் சிறப்பு ஆற்றினார்கள்.இதில் மாவட்ட நிர்வாகிகள் துணை அணி நிர்வாகிகள் நகர கிளை நிர்வாகிகள் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
