திருமங்கலம்: நர்ஸ் மாயம்.. தாயார் புகார்

80பார்த்தது
திருமங்கலம்: நர்ஸ் மாயம்.. தாயார் புகார்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி கொக்குளச்சேரி காமராஜர் காலனியை சேர்ந்த பாண்டியின் மகள் பாண்டிய லட்சுமி (21) என்பவர் மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தங்கியிருந்து செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 4ம் தேதி வீட்டிற்கு வந்தவர் சிறிது நேரத்திலேயே வேலைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். 

ஆனால் இவர் வேலைக்கும் செல்லவில்லை மீண்டும் வீடு திரும்பவும் இல்லை. பெற்றோர்கள் இவரை பல இடங்களில் தேடி கிடைக்கவில்லை என்பதால் நேற்று (மார்ச் 16) பெண்ணின் தாயார் ராமலட்சுமி கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி